ரஞ்சி கோப்பை கிரிக்கெட்:  அட்டவணையில் மாற்றம் ஜனவரி 5ல் தொடங்குகிறது

by Editor / 20-08-2021 04:37:48pm
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்:  அட்டவணையில் மாற்றம் ஜனவரி 5ல் தொடங்குகிறது



நவம்பர் 16 முதல் நடைபெறுவதாக இருந்த ரஞ்சி கோப்பைப் போட்டி, ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ளதாக மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது.
உள்ளூர் போட்டிகளுக்கான அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது பிசிசிஐ. இதில் ரஞ்சி கோப்பைப் போட்டி நவம்பர் 16-ல் தொடங்கி பிப்ரவரி 19-ல் முடிவடைவதாக அறிவித்தது. இந்நிலையில் ரஞ்சி போட்டிக்குத் தயாராவதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவை என கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததால் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ரஞ்சி கோப்பைப் போட்டி ஜனவரி 5-ல் தொடங்கி மார்ச் 20-ல் முடிவடையவுள்ளது. இதனால் அக்டோபர் 20-ல் தொடங்க இருந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி, அக்டோபர் 27-ல் தொடங்கி, நவம்பர் 22-ல் முடிவடையவுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருந்த விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி, டிசம்பர் 1-29 தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தகவல்களை மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via