பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில்  தலிபான் தலைவர்?:

by Editor / 20-08-2021 04:35:51pm
பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில்  தலிபான் தலைவர்?:




தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா எங்குள்ளார் என்பது குறித்து வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் பல்வேறு புதிய தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன. இதுகுறித்த தகவல்களை ஆராய்ந்துவரும் இந்திய அரசு, தலிபான் அமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்துவருகிறது.
ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கலாம் என மூத்த அரசு அலுவலர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆறு மாதகாலமாக, தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்களோ போராளிகளோ கூட அகுந்த்ஸடாவை பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடைசியாக, ரமலான் பண்டிகையின் போது அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தலிபான் விவகாரத்தை பாகிஸ்தான் எப்படி கையாளப்போகிறது என்பது குறித்து இந்தியா தீவிரமாக கவனித்துவருவதாகவும் அலுவலர் கூறியுள்ளார். கடந்த மே மாதம், முன்னாள் தலிபான் தலைவர் அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதையடுத்து, தலைவர் பதவி அகுந்த்ஸடாவுக்கு வழங்கப்பட்டது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெயஸ்-இ-முகமது ஆகிய அமைப்புகளின் பயங்கரவாதிகள் தலிபான்களுடன் சேர்ந்துள்ளதாக இந்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

Tags :

Share via