ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ-அன்னதானம் வழங்கவோ-பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.. சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ளோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்...
Tags :