அதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி..

by Editor / 19-06-2026 02:03:12pm
அதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி..

திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைவதாக வெளியான செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை விளக்கம் அளிக்காமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வரும் விமர்சனங்களுக்கு எப்போதும் பதிலடி கொடுக்கும் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இணைகிறார் என செய்தி வெளியானது குறித்து மறுப்பு தெரிவிக்கவில்லை. 
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மாற்றாக ஒரு முக்கிய புள்ளியை உருவாக்கவே செந்தில் பாலாஜியை இபிஎஸ் அணுகி வருவதாக தகவல் பரவுகிறது.

 

Tags :

Share via
Logo