13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஹாமூன் புயல் 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழந்தது. வடகிழக்கு திசையில் புயல் வலுவிழந்து வங்கதேசத்தின் தெற்கு சிட்டகாங்கில் கரையை கடந்தது. இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
Tags : 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.