வருமான வரி சோதனை - முதல்வர் கண்டனம்
சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்துவரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
Tags :