"தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க....பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை - இபிஎஸ்

by Editor / 01-08-2025 04:07:48pm

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை விதிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி கடலை மிட்டாய், தீப்பெட்டி தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய இபிஎஸ், "தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம். மத்திய அரசின் கவனத்துக்கு தீப்பெட்டி தொழிலாளர்களின் பிரச்னை கொண்டு செல்லப்படும்" என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via