by Staff /
11-07-2023
03:38:22pm
ஜூலை 11 ஆம் தேதி காலை நேபாளத்தில் 6 பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். ஐந்து மெக்சிக்கோ நாட்டு பயணிகள் உட்பட மொத்தம் ஆறு பேர் ஹெலிகாப்டரில் இருந்ததாகவும், ஆறு பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோலுகுந்துவில் இருந்து காத்மாண்டு நோக்கி பயணித்த போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Tags :
Share via