மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி

by Admin / 18-01-2026 12:00:57pm
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி

மேற்கு வங்கத்தில் ஜனவரி 2026 இல் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.அதனையடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .மேற்கு வங்க மாநிலம் நாடியா மற்றும் வட  மாவட்டங்களில் இரண்டு செவிலியர்களுக்கு நிவா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதில்  ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளளார்.  நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பின்வரும் அறிகுறிகள் தென்படலாம் .

 கடுமையான காய்ச்சல்,தலைவலி

மூச்சு விடுவதில் சிரமம்

இருமல் மற்றும் தொண்டை வலி

 மூளை வீக்கம் மயக்கம் அல்லது வலிப்பு

வவ்வால்கள் படித்த பழங்களை உண்ண வேண்டாம் என்றும் பச்சையாக கிடைக்கும் பனை கள் அல்லது பனைநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை நன்றாக கழுவி, தோல் நீக்கியபிறகு உண்ணவும் ,பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளதோடு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo