துபாய் கார் பந்தயத் தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாரை நயன்தாரா- விக்னேஷ் சிவன் நேரில் சந்தித்தனர்.

by Admin / 18-01-2026 12:18:08pm
துபாய் கார் பந்தயத் தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாரை நயன்தாரா- விக்னேஷ் சிவன்  நேரில் சந்தித்தனர்.

துபாயில் ஆட்டோ நடைபெற்று வரும் 2026 காண மிச்செலின் 24 H துபாய் கார் பந்தயத் தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாரை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேரில் சந்தித்தனர். சர்வதேச கார் பந்தயத்தில்  அஜித் குமார் ரேசிங் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நோில்  சென்றிருந்தனர். அவர்கள் இருவரையும் அஜித்குமார்  வரவேற்று தனது கார் பந்தய குழுவினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்களுடன் இசையமைப்பாளர் ஜி.வி . பிரகாசும் கார் பந்தயத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏ .எல். விஜய் இயக்கும் அஜித்தின் கார் பந்தய பயணத்தை பற்றிய காட்சிகள் படமாகி  வருவதாகவும் தெரிகிறது.

 

Tags :

Share via