ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

by Editor / 19-06-2025 11:39:30am
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மீனவர்களை விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை அபகரித்துச் சென்றுள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 2 மாத மீன்பிடித் தடைக்காலத்திற்கு பிறகு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு இலங்கை கடற்படை துன்பத்தை பரிசாக கொடுத்திருக்கிறது.

 

Tags :

Share via