பட்டியலின மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிப்பு - அண்ணாமலை

by Staff / 29-11-2023 01:15:23pm
பட்டியலின மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிப்பு - அண்ணாமலை

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவது கண்கூடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், மதுரை பெருங்குடியில், பட்டியல் சமூக மக்கள் ஐந்து பேரை ஆயுதத்தால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாக்கு அரசியலுக்காக, குற்றவாளிகளுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்காமல், தொடர்ந்து சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது திமுக அரசு. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரண பொதுமக்களே என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories