+1 மாணவர்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் துணைத் தேர்வுக்கு ஜூன் 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெறுவதற்கு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : +1 students can download the first grade certificates from July 1st