ராஜராஜ சோழனை அடுத்து முதல்வர் ஸ்டாலின்தான் அமைச்சர் சேகர் பாபு

by Staff / 02-02-2024 03:21:34pm
ராஜராஜ சோழனை அடுத்து முதல்வர் ஸ்டாலின்தான் அமைச்சர் சேகர் பாபு

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022-23 ஆகிய ஆண்டு காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கினார் என அவர் கூறியுள்ளார். மேலும் வரலாற்றில் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் தான் திருக்கோயில்கள் பணி சிறப்பாக நடந்தது என்பார்கள், அதன் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் கோயில்கள் புனரமைக்கப்படுகிறது என கூறிய அவர் தி.மு.க ஆட்சியில் 1,339 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories