புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா.

by Editor / 18-09-2024 10:12:39pm
புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா.

புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து கருட சேவை (தங்கக் கருட வாகன வீதி உலா) நடப்பது வழக்கம்.

அதன்படி இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை நடந்தது. 

உற்சவர் மலையப்பசாமி சிறப்புஅலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் தேவஸ்தான அதிகாரிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா.
 
Tags :

Share via