திடீரென தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி

by Editor / 13-08-2022 04:04:19pm
 திடீரென தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி


மணலி விரைவு சாலையில் ஜோதி நகர் அருகே தனியார் டிரான்ஸ்போர்டுக்கு சொந்தமான கன்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்தி பழுது பார்த்தனர். திடீரென கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த டிரைவர் சபரிநாதன் (42) உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயம் அடைந்த சபரிநாதன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo