தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

by Staff / 04-03-2025 12:54:21pm
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. களரம்பட்டி என்ற இடத்தில் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேனை திருப்பியபோது கவிழ்ந்தது. தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தைகள் ஆரியபாளையம் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via