காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

by Staff / 04-03-2025 12:48:23pm
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4,379 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் மாணிக்கம் தாகூர் தனது வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்தாக குற்றம்சாட்டியிருந்தார்.

 

Tags :

Share via