வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளி வழிபாடு.

by Staff / 15-04-2022 03:55:03pm
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளி வழிபாடு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

இன்று மாலையில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறைவழிபாடு, சிலுவை ஆராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பேராலய வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக மக்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும், தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo