மோடி பதவியேற்பு: இண்டியா கூட்டணி எம்.பிக்கள் அமளி

by Staff / 24-06-2024 12:54:16pm
மோடி பதவியேற்பு: இண்டியா கூட்டணி எம்.பிக்கள் அமளி

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) நடைபெறுகிறது. முதல் நாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று வருகின்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை காட்டி மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் முதல் நாளிலேயே அவையில் அமளி ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையடக்க அரசியலமைப்பு புத்தகத்துடன் அவைக்குள் ஒற்றுமையாக நுழைந்தனர்.

 

Tags :

Share via