தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு

by Editor / 11-09-2021 07:25:40pm
தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு

 தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,639 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,32,231 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,517 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,80,686 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,58,623 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,40,65,393 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo