கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வழங்கிய முதல்வர்

by Staff / 25-08-2024 01:25:41pm
கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வழங்கிய முதல்வர்

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இன்று (ஆகஸ்ட் 25) நடந்த சந்திப்பின் போது, அண்மையில் வெளியிடப்பட்ட ரூ.100 கலைஞர் நாணயத்தை கமல்ஹாசனிடம் முதலமைச்சர் வழங்கினார். அப்போது, முதலமைச்சரின் வெளிநாடு பயணத்திற்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். இந்த நாணயம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via