இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு: மீட்பு பணிகள் தீவிரம்
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்திலுள்ள பாவ்நகர் பகுதியில் இன்று (மே 12) திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் மலையிலிருந்து பிரம்மாண்டமான பாறைகளும் மண்பகுதிகளும் சரிந்து விழுந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :



















