தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு ?

by Editor / 10-06-2021 05:28:29pm
 தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள்  திறப்பு ?



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். 
இந்த நிலையில் இந்த ஆலோசனையில் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு மேலும் நீடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்கவும் மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவையில் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டதால் தமிழகத்தில் இருந்து மது வாங்க புதுவை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தின் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via