குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது.

by Editor / 08-12-2024 10:03:22am
குற்றால அருவிகளில்   நீர் வரத்து குறைந்தது.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் மழை இல்லாத நிலை கடந்த ஒரு வார காலமாக நீடித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக குற்றாலத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வனப்பகுதியில் மழை இல்லாததின் காரணமாக நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது மேலும் தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் சபரிமலை சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் அருவியில் நீராடாமல் செல்வதில்லை சபரிமலையில் நடை திறந்து 24 நாட்கள் ஆன நிலையில் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது இருப்பினும் குற்றாலம் அருவியில் குறைந்த அளவை தண்ணீர் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் குற்றாலம் பிரதான அருவியில் அதிகரித்தே காணப்படுகிறது.

 

Tags : குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது.

Share via