சாரல் திருவிழா - பாரம்பரியத்தை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்.

by Editor / 16-08-2024 08:53:18pm
 சாரல் திருவிழா - பாரம்பரியத்தை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்.

தென்றல் தவிழும் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாரலுக்கே உரியதான குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இன்று முதல் 4 நாட்கள் நடைபெற உள்ள குற்றால சாரல் திருவிழாவின்போது, பல்வேறு பாரம்பரிய பண்பாடுகளை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், சாரல் திருவிழாவினை முன்னிட்டு குற்றால நகரமே மின்னொழியில் ஜொலித்து வருகின்றன.

இந்த நிலையில், சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஐந்தருவி பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சிகள், காய்கறிகளாலான உருவ பொம்மைகள் கண்காட்சிகள், சிறுவர் சிறுமிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வடிவங்களில் தோட்டக்கலைத்துறை பயிர்களால் உருவங்கள் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த கண்காட்சியானது இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தற்போது சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்கு திறந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது இந்த ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் குவிந்து வரும் நிலையில், தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் மங்கல இசைகள் முழங்க சாரல் திருவிழா தொடக்க நிகழ்வானது தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் முன்னிலையில் தொடங்கப்பட்ட நிலையில், தொடக்க நிகழ்வு நிறைவுக்கு பின்னர் சுமார் ஒரு மணி அளவில் கொளு,கொளு குழந்தைகள் போட்டி, கேரளா கலைஞர்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்று முழுவதும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த விழா தொடக்கத்தில் இதுவரை அமைச்சர்கள் தொடங்கிவைப்பதுதான் முறையாக இருந்துவந்தநிலையில் இந்த ஆண்டு விழா அமைச்சர்களின்றி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சாரல் திருவிழா - பாரம்பரியத்தை உணர்த்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்.

Share via