திமுக 38 தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் பாரதிய ஜனதா ஒரு தொகுதியிலும் முன்னிலை

by Admin / 04-06-2024 10:34:43am
 திமுக 38 தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் பாரதிய ஜனதா ஒரு தொகுதியிலும் முன்னிலை

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முன்னணி நிலையில் உள்ளது. பெரும்பான்மையான கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அதிகபட்சமாக 37 தொகுதிகளுக்கு மேலாக வெல்லும் என்ற கணிப்பு கிட்டத்தட்ட உறுதியான நிலையில் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுகவின் கோட்டை என்ற கருதப்படும் வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தற்போதைய நிலவரப்படி திமுக 38 தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் பாரதிய ஜனதா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது இந்திய அளவில் என் டி ஏ கூட்டணி 297 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 215 தொகுதிகளிலும் மற்றவர்கள் 31 தொகுதிகளிலும் முன்னடி வகுத்து வருகின்றார்கள்.வாரணாசியில் பிரதமா் மோடி முன்னிலை.

 

Tags :

Share via