நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிய கும்பல்.

by Editor / 17-01-2023 09:03:49am
 நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிய கும்பல்.

நெல்லை டவுன் பகுதி குற்றால ரோட்டில் நேற்று இரவு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கு வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் விட்டுச் சென்ற இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து நெல்லை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் அப்பகுதியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் டவுன் பகுதியில்  போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் தற்போதும் பரபரப்பு நிலை உள்ளது.மர்மக்கும்பல் எதற்காக நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது..ஏதும் சாதித்திட்டத்தோடு இந்த செயலில் அந்தக்கும்பல் ஈடுபட்டதா...என்பது குறித்தும் பலகட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிய கும்பல்.

Share via

More stories

Logo