தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று தஞ்சாவூரில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சியை தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு மற்றும் முதல்வர் விஜய் மெத்தனமாக செயல்படுவதாகவும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளதாகவும் தெரிவித்ததோடு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க மறுப்பதை எதிர்த்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேகதாது அனைத்து திட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு தமிழக அமைச்சர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் ரிலீஸ் படுவதிலும் சினிமா பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியதோடு காவிரி நீர் விவகாரம் விவசாயிகளின் வாழ்வாதார பாதிப்புகள் மற்றும் தமிழக அரசின் அலட்சிய போக்கு குறித்து வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்றும் சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் விவசாயிகளுக்காக தொடர்ந்து திமுக போராடும் என்றும் தெரிவித்தார்.
Tags :



















