அதிமுக - பாஜக கூட்டணி... உறுதி செய்த அமித்ஷா
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் பாஜகவின் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை வலுப்படுத்த உழைத்து வருகிறோம். நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடத்தில் கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம் என பேசி உள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி மக்களவைத் தேர்தலில் இணைந்து செயல்படும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :