பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு. 

by Editor / 10-05-2024 12:25:04am
பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய  பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு. 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவர் பாஜகவின் முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடவாசல் பகுதியில் நேற்று தனது கடையின் வாசலில் அமர்ந்து இருந்த பொழுது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தலை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. 

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுசூதனன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மதுசூதனனின் மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்அரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடைபெற்று இருப்பதாக கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் ஆறு பேர் மீது குடவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு 

Share via

More stories