கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 30மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்.

by Editor / 10-05-2024 12:33:27am
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 30மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 2000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன இதேபோன்று கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கும் 24 மணி நேரமும் ஏராளமான வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளன இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததன் தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படையினர் புளியரை காவல்துறை சோதனை சாவடி அருகே திடீர் வாகன தணிக்கை நடத்தினர் அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த தோஸ்த் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது காலி சாக்குகளுக்கு இடையே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 30 மூடை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட புகையிலை பொருட்கள் அங்கிருந்து தமிழகத்திலிருந்து பொருட்கள் ஏத்தி செல்லும் வாகனத்தில் ஏற்றி வரப்பட்டதும் தெரிய வந்தது . மேலும் புகயிலைப் பொருட்கள் கடத்தி வந்த வாகனத்தில் புனலூர் பகுதியைச் சார்ந்த அருண் வளவன், மற்றும் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சக்திவேல் முருகன் ஆகிய இரண்டு நபர்களையும்  புகயிலைப் பொருட்கள்,மற்றும் கடத்தி வந்த ஆட்டோ ஆகியவற்றை தனிப்படை போலீசார் புளியரை போலீசார் வசம் ஒப்படைத்தனர்  புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு புகையிலை பொருட்கள் வரவு தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 30மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்.

Share via