அதிகரிக்கும் பசிக்கொடுமை: அரசுகள் மௌனம் காப்பது ஏன்

by Staff / 28-05-2024 01:36:33pm
அதிகரிக்கும் பசிக்கொடுமை: அரசுகள் மௌனம் காப்பது ஏன்

இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. பட்டினிக்கு முதன்மை காரணமாக இருக்கும் வறுமையை போக்குவதற்கு அரசாங்கம் சீரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. ஒருவேளை உணவுக்காக கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரசாங்கத்திடம் பணம் இல்லை எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. நிதி பற்றாக்குறை இருந்தால் பெரும் பணக்காரர்களிடம் தேக்கி வைக்கப்பட்ட பணத்தை அனைவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்தாலே வறுமை ஒழிந்து இருக்கும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை எந்த அரசும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.

 

Tags :

Share via