வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
நாமக்கல்லை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தந்தையிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஈரோட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதுபோதைக்கு அடிமையான தந்தை, தாயாருடன் சண்டை போட்டு வந்ததால் மனமுடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேடிய போலீசார் சிறுமியின் சடலத்தை வாய்க்கால் அருகே கண்டெடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Tags :