யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி பலி
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள டைகர் பள்ளத்தாக்கு அருகே காட்டு யானை தாக்கியதில் ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் மைக்கேல் ஜூர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (பிப்.04) மாலை 6 மணியளவில், வாடகை பைக்கில் அப்பகுதிக்கு சென்றுள்ளார். சாலையில் யானை நிற்கிறது செல்ல வேண்டாம் என பொதுமக்கள் கூறியதை கேட்காமல் சென்ற அவரை யானை விரட்டி விரட்டி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Tags :