சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி

by Staff / 04-05-2022 02:55:32pm
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞரொருவர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார். பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்க ரசாயன மூலக்கூறுகளை கலவை செய்யும்போது அவை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் பட்டாசு தயாரிப்பு அறை ஒன்று தரை மட்டமானது அதில் அந்த கட்டிடத்திற்குள் பணியிலிருந்த விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில் வெடிமருந்து கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories