உலகளாவிய வேளாண் உணவு அமைப்புகளில் பெண்களின் பங்கு- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
வேளாண் உணவு அமைப்புகளில் பெண்களின் பங்கு குறித்த உலகளாவிய மாநாட்டை இன்று புது டெல்லியில் மூன்று நாள் நடைபெறும் இம்மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர் மு. வேளாண்மையின் எதிர்காலம் பெண்களின் அதிகப்படியான பங்கேற்பு மற்றும் தலைமையால் வலுப்படும் என்றும் வேளாண்மை மற்றும் உணவு சார்ந்த துறைகளில் கொள்கை உருவாக்கும் முடிவெடுத்தல் மற்றும் தலைமை பொறுப்புகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார் .விதைப்பு முதல் அறுவடை ,பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை மேலாண்மையின் ஒவ்வொரு நிலையும் பெண்கள் முக்கிய பங்காற்றுவதை அவர் சுட்டிக் காட்டினார். .வேளாண்மையில் பெண்களின் ஈடுபாடு அதிகரிப்பது பாலின உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் இது நீடித்த மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வடிவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார் .வேளாண் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பாராட்டிய அவர் நில உரிமை, தொழில்நுட்ப அறிவு மற்றும் நிதி உதவிகளில் பெண் விவசாயிகளுக்கு உரிய ஆதரவு வழங்கப்பட வேண்டும். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகளுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர் இவர்களின் சாதனைகளை அடுத்த தலைமுறை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாநாட்டில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Tags :



















