ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.

by Editor / 28-03-2024 08:29:40am
ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.

ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கோவை தனியார் மருத்துவமனையில் 72 மணி நேர தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழப்பு.

 

Tags : ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.

Share via

More stories