குன்னூர் விபத்து - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 01-10-2023 12:38:05pm
குன்னூர் விபத்து - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், சுற்றுலா பேருந்து விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். குன்னூர் பேருந்து விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via