பயங்கர தீ விபத்து.. ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

by Editor / 16-06-2025 02:35:59pm
பயங்கர தீ விபத்து.. ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

கேரள மாநிலத்தில், பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஒரு பெயிண்ட் கிடங்கில், இன்று (ஜூன் 16) இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என நம்பப்படுகிறது.
 

 

Tags :

Share via