திமுக கூட்டணியில் பாமக?- அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

by Editor / 16-06-2025 02:38:55pm
திமுக கூட்டணியில் பாமக?- அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்டத் தொடக்க விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன என துரைமுருகன் கூறினார். மேலும் அவர், திமுக ஆட்சிக் காலத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது என பேட்டியளித்தார்.

 

Tags :

Share via