விமான பயணிகள் பயணம் செல்ல முடியாமல் அவதி.

by Staff / 08-05-2024 12:57:11pm
விமான பயணிகள் பயணம் செல்ல முடியாமல் அவதி.

மதுரை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த விமான பயணிகள் பயணம் செல்ல முடியாமல் அவதி.

இந்தியா முழுவதும் உள்ள ஏர் இந்தியா பணியாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திருச்சி, கொச்சி, டெல்லி, பெங்களூர், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட உள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் ஏர்இந்தியா விமானம் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில்., ஏர் இந்தியா விமான மூலம் பயணம் செய்ய இருந்த பயணிகள் பயணம் செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட ஏர்இந்தியா விமானம் மூலம் பயணம் செய்ய இருந்த பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எவ்வித முன்னறிவிப்பு இன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதால் பயணம் செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோன்று திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமான பயணிகளை நேற்று திருச்சி விமான நிலைய ஏர் இந்தியா நிறுவனம் இன்று மதுரை செல்லும்படி அறிவுறுத்தியதால் திருச்சியைிலிருந்து செல்ல வேண்டிய சிங்கப்பூர் பணிகள் இன்று மதுரை வந்த நிலையில் அவர்களும் பயணம் செய்ய முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளதால் மதுரை விமான நிலைய ஏர் இந்தியா விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories