2 அர்ச்சகர்கள் 6 மாதம் சஸ்பெண்ட்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பத்தர்களுக்கு விநியோகம் செய்த சில விபூதி பாக்கெட்டுகளில், அன்னை தெரசா படத்துடன் கிறிஸ்தவ பெயரில் செயல்படும் ஒரு துணிக்கடையின் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்ததாக, சமூக வலைதளங்களில் படத்துடன் தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் கோயில் நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.அதையடுத்து, அன்னை தெரசா படத்துடன் கூடிய விபூதி பாக்கெட்டுகளை கோயில் நிர்வாகம் தயாரிக்கவில்லை என்றும், தனிப்பட்ட அர்ச்சகர்கள் சிலர், துணிக்கடை விளம்பரத்துடன் விபூதி பாக்கெட்டுகளை தயார் செய்து வழங்கியுள்ளனர் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்தனர். விசாரணையில், 2 அர்ச்சகர்கள் மூலம் விபூதி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, சோமநாத குருக்கள், முத்துகுமாரசாமி குருக்கள் ஆகிய 2பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டார்.
Tags :