எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் சென்று பொறுப்பேற்றார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தொலைபேசியில் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Tags : annamalai



















