ஜல்லிக்கட்டு - மத்திய அரசு அதிர்ச்சி பதில்

இந்தியாவில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தங்களை மத்திய அரசு எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை. இந்தப் போட்டிகளை ஊக்குவிக்கும் திட்டங்களும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதில் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து அதை தமிழக மக்கள் போராடி அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags :