"நீ யார் எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு" திருச்சி சிவா

கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக மதுரையில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைபொதுச் செயலாளர் திருச்சி சிவா கோபம் கொந்தளிக்க பேசியுள்ளார். அவர் பேசுகையில், "உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு நீ யார். கீழடியின் ஆய்வறிக்கை அறிவிப்பாக வெளிவரும் வரை ஓய மாட்டோம்" என சூளுரைத்தார். மேலும், 'கீழடி எங்கள் தாய்மடி என முழக்கமிடுங்கள்' என்று மக்களை கேட்டுக்கொண்டார்.
Tags :