ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்திய கப்பல்படைக்கு இன்று இரு போர்கப்பல்கள் அர்பணிக்கபடுகின்றது, ஐ.என்.எஸ் உதயகிரி மற்றும் ஹிம்கிரி எனும் இரு கப்பல்களும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது. உள்நாட்டிலே தயாரிக்கபட்டவை, இவை கடலில் உளவுபார்த்தல், ரேடார்களில் சிக்காமல் கண்காணிப்பில் ஈடுபடுதல் தேவை ஏற்படின் தாக்குதல் என நவீன வசதிகள் அனைத்தும் கொண்டது,
ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர் கப்பல்களும் திட்டம் 17 ஆல்பா (P-17A)ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒரே நாளில் இரு கப்பல்களை கடலில் இறக்குவது பெரிய சாதனை,விசாகப்பட்டினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச நாடுகளில் சீனாவின் வளர்ந்து கடல் விரிவாக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் நிலையில், இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கடல் வர்த்தக பாதைகளை பாதுகாப்பது மற்றும் மலாக்கா நீரிணையில் இருந்து ஆப்பிரிக்கா வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Tags : ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு