குடும்பத்துடன் வாலிபர் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம் மண்டசூர் மாவட்டத்தில் உள்ள சம்கர் பகுதியில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. 30 வயதுடைய நபர் ஒருவர் தனது மகள் (10), மகன் (12) ஆகியோரை தூக்கிலிட்டார். பின்னர் அதே மரத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிராமத் தலைவரால் தனது மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த நபர் தற்கொலைக் கடிதம் எழுதியுள்ளார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :