மதுரை சித்திரைத்திருவிழா  செயின்பறிப்பு  வட மாநில பெண் உட்பட 2 பெண்கள் கைது

by Editor / 08-05-2023 10:20:29am
மதுரை சித்திரைத்திருவிழா  செயின்பறிப்பு  வட மாநில பெண் உட்பட 2 பெண்கள் கைது

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.சித்திரைத்திருவிழாவில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.இந்த நிலையில் சித்திரை திருவிழா கூட்டத்தில் பல்வேறு பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகளை பறித்த தூத்துக்குடியை சேர்ந்த வில்டா என்ற பெண்ணும், மேற்கு வங்கத்தை சேர்ந்த லதா என்ற பெண் என 2 பெண்கள் கைது தல்லாகுளம் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via