நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது.

by Editor / 08-05-2023 10:00:35am
நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது.

தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பகுதியில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினுடைய மாநில தலைவர் மகாராஜன், சந்தனகுமார்,கணேசன்,நம்பிராஜன்,பிச்சமணி ஆகியோர் இருசக்கரவாகனத்தில் வந்த பொழுது குறும்பலாபேரியில் வைத்து தென்காசி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு அச்சன்புதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் அந்த காவல் நிலையத்தில் இருந்து மகாராஜன் உள்ளிட்டவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அசம்பாவிதங்கள் ஏதும் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு பகுதி காவல்நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் பாவூர்சத்திரம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு வைத்து உயர் காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்குப்பின்னர் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு  பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி வீட்டில் 5 பேர்களையும் ஆஜர் செய்ய உள்ளனர்.இதன் காரணமாக தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இவர்கள் மீது  ஏற்கனவே பதட்டமாக இருக்கும் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்களை சந்தித்து மேலும் பதட்டத்தை உருவாக்கும் விதமாக 5 பேருக்கு மேல் கூடி பேசியதாக 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபபட்டுள்ளதாக்க காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo